திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் கோட் படத்தின் ப்ளக்ஸ் பேனர்கள் அகற்றம்.

by Editor / 05-09-2024 02:56:35pm
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் கோட் படத்தின் ப்ளக்ஸ் பேனர்கள் அகற்றம்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times). இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கோட் திரைப்படம்  இன்று திரையரங்குகளில் வெளியானது.

தமிழ்நாட்டில் 1100 திரைகளிலும் வடமாநிலங்களில் 1000 திரைகளிலும் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என கிட்டத்தட்ட 5000 திரைகளில் கோட் பிரம்மாண்டமாக வெளியாகியது. இந்த நிலையில், கோட் படம் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு திரையரங்குகள் முன்பாக பிளக்ஸ், பேனர்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் வைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைப்பதற்கு காவல்துறையினரின் அனுமதி பெற வேண்டிய தேவை இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அதற்கு உள்ளாட்சி நிர்வாகத்தை ‌ அணுகி உரிய அனுமதி பெற்றுக்கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்தநிலையில் இன்று திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் நடிகர் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் ப்ளக்ஸ் பேனர்கள்  அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக கூறி மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.

 

Tags : திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் கோட் படத்தின் ப்ளக்ஸ் பேனர்கள் அகற்றம்.

Share via