வெம்பக்கோட்டை அகழாய்வில் மெருகேற்றும் கல் கண்டுபிடிப்பு
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை தங்க ஆபரணங்கள், சங்கு வளையல்கள், உருவ பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் என 3000-க்கும் அதிகமான பொருட்கள் கிடைத்துள்ள நிலையில், தற்போது மெருகேற்றும் கற்கள் கிடைத்துள்ளன. சங்கு வளையல்கள் உள்ளிட்ட ஆபரணங்களை மெருகேற்ற இந்த கற்களை தமிழர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர் என அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Tags :