காதலை ஏற்க மறுத்த காதலிக்கு கத்திக்குத்து

by Staff / 25-10-2022 11:27:59am
காதலை ஏற்க மறுத்த காதலிக்கு  கத்திக்குத்து

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் முத்துராஜ் (25) என்பவர் அதே பகுதியில் உள்ள ஹேமலதா என்ற (24) தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வரும் பட்டதாரி பெண்ணை காதலிக்க வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.ஆனால், அப்பெண் காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் முத்துராஜ் பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண்ணின் தாய் தந்தை முன்பாகவே மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு முதுகு, கைகளில் தொடர்ந்து கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்துள்ளார். இதனிடையே பெண்ணின் அலறல் சத்தம் மற்றும் தாய் தந்தையர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை மடக்கி பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் வடகரை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து பெரியகுளம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories