பாலிவுட் சூப்பர் ஸ்டார்  அமிதாப் பச்சன்  வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

by Editor / 07-08-2021 05:03:41pm
பாலிவுட் சூப்பர் ஸ்டார்  அமிதாப் பச்சன்  வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

 மும்பையில் உள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சற்றுமுன் வந்த போன் காலில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்பட மூன்று ரயில் நிலையங்கள் மற்றும் நடிகர் அமிதாப்பச்சன் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் சுறுசுறுப்பாகி இதுகுறித்து விசாரணை செய்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பதை போலீசார் விசாரணை செய்தபோது குடிபோதையில் இருந்த ஒரு நபர் தான் இந்த வேலையை செய்துள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். 
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகம் உள்பட ஒருசில பகுதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதும் இந்த மிரட்டலுக்கும் தற்போதைய மிரட்டல் விடுத்தவருக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

 

Tags :

Share via