முதல்வர் மருந்தகங்கள்- இன்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முதல் மருந்தகத்தை திறந்து வைத்தார்

by Admin / 24-02-2025 11:12:53am
முதல்வர் மருந்தகங்கள்- இன்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முதல் மருந்தகத்தை திறந்து வைத்தார்

ஏழை எளிய மக்கள் மருந்துகளை குறைந்த விலையில் வாங்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தியாகராய நகரில் முதல் மருந்தகத்தை திறந்து வைத்தார். சென்னையில் 33 இடங்களில் முதல்வர் மருந்தகம் அமைய உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 500 இடங்களில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் மற்றும் 500 மருந்துகளை தனியார் ஆர்வலர்கள் மூலமாக நடத்தப்பட உள்ளது. துணை மருத்துவ படிப்பான பார்மசி படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலமாக இந்த மருந்தகங்கள் இயக்கப்பட உள்ளன. இந்நிகழ்வில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பாலசுப்பிரமணியன் தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

 

Tags :

Share via