மருத்துவ மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில் உள்ள பாகேஷ்வர் தாம் மருத்துவ மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நாடு தனக்கு சேவை செய்யும் வாய்ப்பை வழங்கியபோது, ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்ற மந்திரத்தை அரசின் தீர்மானமாக மாற்றியதாக அவர் குறிப்பிட்டார். 'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்பதன் முக்கிய அடித்தளம் 'சப்கா இலாஜ், சப்கோ ஆரோக்யா' அதாவது அனைவருக்கும் ஆரோக்கியம் என்பதை அவர் எடுத்துரைத்தார் மற்றும் பல்வேறு நிலைகளில் நோய் தடுப்புக்கு கவனம் செலுத்துவதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
Tags :