தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதம்

by Admin / 19-12-2025 05:54:07pm
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதம்

 

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதம் எழுதி உள்ளார். அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத கூடுதல் இறக்குமதி வரி காரணமாக தமிழ்நாட்டில் ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து அவர் இந்த கடிதத்தில் விளக்கியுள்ளார். அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால் திருப்பூர் கோவை ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 60 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் திருப்பூரில் மட்டும் சுமார் 15,000 கோடி மதிப்பிலான உறுதி செய்யப்பட்ட ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் மேலும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் பெருமளவு குறைந்து உள்ளதாகவும் தமிழ்நாட்டில் முக்கிய ஏற்றுமதி துறைகளான ஜவுளி ஆடை மற்றும் தோல் பொருள்கள் ஆகியவை கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளன என்றும் இத்துறைகளில் பணி புரியும் சுமார் 85 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது குறிப்பாக வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் காலணி உற்பத்தி தொழிலில் லே ஆஃப் மற்றும் ஊதிய நிலுவை போன்ற பிரச்சனைகள் தொடங்கியுள்ளன என்றும் வரி உயர்வாள் வியட்நாம் வங்கதேசம் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளுக்கு சர்வதேச ஆர்டர்கள் மடைமாற்றம் செய்யப்படுவதால் இந்திய ஏற்றுமதியாளர்களின் சந்தை வாய்ப்பு நிரந்தரமாக பறிபோகும் அபாயம் உள்ளது என்றும் பிரதமர் பிரச்சனைகள் உடனடியாக தலையிட்டு இருதரப்பு பேச்சு வார்த்தைகள் மூலம் வரி விதிப்பதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் ஏற்றுமதியாளர்களுக்கு நிதி நெருக்கடியை குறைக்க சிறப்பு வட்டி மானிய திட்டத்தையும் கோவிட் காலத்தில் வழங்கப்பட்டது போன்ற சிறப்பு நிதி உதவி தொகுப்பையும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

Tags :

Share via

More stories