சட்டமன்றத்தில் பெட்ஜெட் அறிவிப்புக்கள்
வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது,
பதவியேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றினார்,
மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு தொலைநோக்கு திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.
தமிழ் மற்றும் இந்தோ - ஐரோப்பிய மொழிகள் தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்படும்,தமிழ் மொழி குறித்த ஆய்வுக்காக ₹2 கோடி ஒதுக்கீடு,அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ₹15 கோடி செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்படும், தமிழ்வளர்ச்சி துறைக்கு பட்ஜெட்டில் ₹82.86 கோடி நிதி ஒதுக்கீடு,தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு, 2 இடங்களில் தல ஆய்வு செய்யப்படும்,தொல்லியல் ஆய்வுகளுக்காக ₹7 கோடி ஒதுக்கீடு,விழுப்புரம், ராமநாதபுரத்தில் ₹10 கோடி செலவில் அருங்காட்சியகம்,
நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரம் வாங்க ₹15 கோடி ஒதுக்கீடு, ₹125 கோடி செலவில் புதிய நூலகங்கள் அமைக்கப்படும்,தமிழக பட்ஜெட்டில் காவல்துறைக்கு ₨:10,285 கோடி ஒதுக்கீடு,அரசு பள்ளிகளை தரம் உயர்த்த பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய திட்டம்,நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன் வளர்ச்சிக்கு ₨50 கோடி நிதி ஒதுக்கீடு,சென்னை ஆர்.கே.நகரில் புதிய விளையாட்டு வளாகம் ₨10 கோடியில் அமைக்கப்படும்,தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₨17,901 கோடி நிதி ஒதுக்கீடு,அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்,
Tags : Budget announcements in the legislature