12 மணி நேர வேலை மசோதா விவகாரம்:அரசியல்கட்சிகள் கண்டனம்

by Editor / 22-04-2023 05:22:19pm
12 மணி நேர வேலை மசோதா விவகாரம்:அரசியல்கட்சிகள் கண்டனம்

எடப்பாடி பழனிசாமி :12 மணி நேர தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்,தவறினால், தமிழக தொழிலாளர்களின் நலன் காக்க அதிமுக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என எச்சரிக்கிறேன்.என - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்.:தொழிலாளர் சமூகத்திற்கு எதிரான இந்த மசோதா, திமுகவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும்.  தோழமை கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டு உள்ளது.இந்த தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விசிக வலியுறுத்தும்.என தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை:"பணியாளர்களை கொத்தடிமைகளாக்கும் 12 மணி நேர பணிச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டில் இயற்றப்பட்டுள்ள 12 மணி நேர சட்டம் என்பது தொழிலாளர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை  ஏற்படுத்தும் என - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் விடுத்துள்ள அறிக்கையில்  சமூக நீதி அரசு தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் வகையில் நிறைவேற்றியுள்ள 12 மணிநேர பணிநேர சட்ட மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via