பள்ளிக் கல்வித் துறையில் 9 இணை இயக்குநா்கள் பணியிடமாற்றம்

by Staff / 17-10-2023 11:52:05am
பள்ளிக் கல்வித் துறையில் 9 இணை இயக்குநா்கள் பணியிடமாற்றம்

பள்ளிக் கல்வித் துறையில் ஆறு துணை இயக்குநா்களுக்கு இணை இயக்குநா்களாக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது; அதேவேளையில் 9 இணை இயக்குநா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறைச் செயலா் குமரகுருபரன் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளாா். அதன்படி, துணை இயக்குநா்கள் பெ. அய்யண்ணன், அ. ஞானகெளரி, ஆா். பூபதி, ஆா். சுவாமிநாதன், கே. முனுசாமி, எம். இராமகிருஷ்ணன் ஆகியோா் இணை இயக்குநா்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா். மேலும், இணை இயக்குநா்கள் க. சசிகலா, சி. செல்வராஜ், செ. அமுதவல்லி, க. செல்வகுமாா், பொன். பொன்னையா, வை. குமாா், நா. ஆனந்தி, வெ. ஜெயக்குமாா், செ. சாந்தி ஆகியோா் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள பல்வேறு இணை இயக்குநா் நிலையிலான பணியிடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

 

Tags :

Share via