அரசுப் பேருந்து முன்பதிவு கடந்த ஆண்டை விட அதிகரிப்பு

by Staff / 24-03-2024 03:17:10pm
அரசுப் பேருந்து முன்பதிவு கடந்த ஆண்டை விட அதிகரிப்பு

கடந்த ஆண்டு மார்ச் 1 முதல் 18 ஆம் தேதி வரையிலான கால கட்டத்தை ஒப்பிடும்போது, நடப்பாண்டு, 16.81 சதவீதம் முன்பதிவு அதிகரித்துள்ளது. அதன்படி, நடப்பாண்டில் மொத்தம் 2.38 லட்சம் பேர் மொத்தமாக முன்பதிவு செய்து அரசுப் பேருந்துகளில் பயணித்துள்ளனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இறுதி நேர நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு முன்பதிவு செய்வது தீர்வாக இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. https://tnstc.in என்ற இணையதளம் அல்லது TNSTC செயலி வாயிலாக முன்பதிவு சேவையைப் பெறலாம்.

 

Tags :

Share via