தஞ்சையில் ஆயுதங்களுடன் சுற்றிய 6 பேர் கைது

by Staff / 11-12-2022 05:14:45pm
தஞ்சையில் ஆயுதங்களுடன் சுற்றிய 6 பேர் கைது

தஞ்சை நகரில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா கந்தபுனேனி உத்தரவின்பேரில், தஞ்சை தெற்கு காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சை பூச்சந்தை அருகே, பொது இடத்தில் இரண்டு பேர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்ததாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறையினர் ஆயுதங்களுடன் திரிந்து கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.  அதில், அவர்கள் தஞ்சை பூக்காரத் தெருவை சேர்ந்த அசோக் (26) முரளி (28) என்பது தெரிய வந்தது.  

இதேபோல்  தஞ்சை மாரிக்குளம் சுடுகாடு பகுதியில் அரிவாள்களுடன் நின்றிருந்த முனியாண்டவர் காலனியைச் சேர்ந்த  ஆரோக்கியராஜ் (27), சக்திவேல் (30), வடக்கு வாசலைச் சேர்ந்த ஜெய்சங்கர் (52), பூக்காரத் தெருவை சேர்ந்த கருப்பு பிரபா (32) ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் எதற்காக ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தனர் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories