சேலையில் தீப்பிடித்து பெண் பலி

by Staff / 11-12-2022 05:10:03pm
சேலையில் தீப்பிடித்து பெண் பலி

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே கீழவழுத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுந்தரம் இவர் உணவகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராணி (வயது 50) இவர்  கார்த்திகை திருநாளையொட்டி தனது வீட்டில் தீப விளக்குகள் இயற்றியுள்ளார். பிறகு அடுப்பு பற்ற வைப்பதற்காக அலமாரியின் மேலிருந்து மண்ணெண்ணெய் கேனை எடுத்துள்ளார். அப்போது மண்ணெண்ணெய் கேன் கை தவறி கீழே விழுந்தது இதில் இருந்த மண்ணெண்ணெய் எரிந்து கொண்டிருந்த அகல்விளக்குகளின் மீது பட்டு ராணியின் சேலையில் தீப்பிடித்து அவரது உடலில்  தீ பரவியது இதனை பார்த்த சுந்தரம் மனைவி மீது பரவிய தீயை அணைக்க முயன்றுள்ளார். அப்போது சுந்தரத்தின் உடலிலும் தீக்காயம் ஏற்பட்டது இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ராணி சுந்தரம் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி இறந்தார். சுந்தரத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புகாரின் பேரில் அய்யம்பேட்டை காவல்  ஆய்வாளர்  வனிதா, உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via