இடி தாக்கியதில் 20 ஆடுகள் பலி.

மேட்டூர் அடுத்த கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஐயந்துறை (47). கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து விட்டு நேற்று மாலை தனக்கு சொந்தமான நிலத்தில் 50க்கும் மேற்பட்ட ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு உறங்கச் சென்று விட்டார். நேற்று இரவு முழுவதும் அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நள்ளிரவு ஒரு மணி அளவில் ஆட்டுப்பட்டி மீது இடி தாக்கியது. இதில் 16 செம்மறியாடு, 4 வெள்ளாடு பரிதாபகமாக உயிர் இழந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். இறந்து போன ஆடுகளை கால்நடை மருத்துவர் மூலம் உடல் கூறு ஆய்வு செய்து அப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது மேலும் காயம் அடைந்த ஆடுகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இறந்து போன ஆடுகளின் மதிப்பு மூன்று லட்சம் இருக்கும் என்றும், இறந்து போன ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தார்.
Tags :