உடற்பயிற்சி கூடத்துக்கு ரூ.2.5 லட்சத்தில் உபகரணங்களை வழங்கிய கமல்

by Editor / 29-06-2021 10:08:42am
உடற்பயிற்சி கூடத்துக்கு ரூ.2.5 லட்சத்தில் உபகரணங்களை வழங்கிய கமல்

சட்டப்பேரவை தேர்தலில்கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், காந்திபார்க் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அங்கு பொதுமக்கள் பயன்படுத்திவரும் உடற்பயிற்சி கூடத்துக்கு தேவையான உபகரணங்களை வாங்கித் தர வேண்டும் என உடற்பயிற்சி செய்வோர் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக கமல்ஹாசன் உறுதியளித்தார். இந்நிலையில், தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும், அந்த உடற் பயிற்சி கூடத்துக்கு உபகரணங்களை கமல்ஹாசன் வழங்கியுள்ளார்.

 

Tags :

Share via