நீட்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது-.தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின்

by Admin / 07-06-2024 01:50:58pm
நீட்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது-.தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின்

தமிழகமுதலமைச்சர் மு .க .ஸ்டாலின் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்..

சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன. இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம்:

 

Tags :

Share via

More stories

Logo