நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்கியது
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த 10-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சினில் உருவாக்கப்பட்ட செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல், நாகை துறைமுகத்திற்கு கடந்த 7-ம் தேதி வந்தது. நாகை - இலங்கையின் காங்கேசன்துறை இடையயேயான பயணிகள் கப்பல் சேவையை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த கப்பலுக்கு 'செரியபாணி' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 150 பேர் இதில் பயணிக்கலாம். ஒரு பயணி 50 கிலோ எடை கொண்ட பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Tags :