கர்நாடகாவில் திருமண விழாவிற்கு சென்ற ஜீப் மரத்தில் மோதி 7 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடகாவில் திருமண விழாவிற்கு சென்ற ஜீப் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் மணமகளின் தாய் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். பெங்களூரு, கர்நாடக மாநிலம் தார்வார் அருகே நிகதி பகுதியை சேர்ந்தவர் நீலவ்வா(வயது 60). இவரது மகளுக்கு 20ம்தேதி திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. 21ம் தேதி காலை அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக நிகதி பகுதியை சேர்ந்த 21 பேர் ஒரு ஜீப்பில் சென்றனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோர உள்ள மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் ஜீப் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மணமகளின் தாய் நீலவ்வா, ஷில்பா மற்றும் ஹரீஷ் ஆகியோர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.காயம்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags : 7 people collide with a jeep while going to a wedding in Karnataka Died.