தமிழகத்தில் 3 ராஜ்யசபா  எம்.பி.களுக்கான  இடங்கள் காலி

by Editor / 10-05-2021 07:45:11pm
தமிழகத்தில் 3 ராஜ்யசபா  எம்.பி.களுக்கான  இடங்கள் காலி


தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்களான கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், சமீபத்தில் அதிமுகவைச் சேர்ந்த மற்றொரு எம்.பி.யான முகமது ஜான் காலமானார். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 3 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான இடங்களில் காலியாக உள்ளது.
மாநிலங்களவையில் தற்போது எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், என். சந்திரசேகரன், என். கோகுலகிருஷ்ணன், கே.பி. முனுசாமி, ஏ. நவநீதகிருஷ்ணன், எம். தம்பிதுரை, ஆர். வைத்திலிங்கம், ஏ. விஜயகுமார் உள்பட 8 உறுப்பினர்கள் உள்ளனர். அக்கட்சியின் மற்றொரு உறுப்பினர் முகம்மது ஜான் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், தற்போது கே.பி.முனுசாமியும், வைத்திலிங்கமும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், அதிமுகவின் பலம் 5 ஆக குறைந்துள்ளது.
இவர்களில், எஸ்.ஆர்.பி, நவநீதகிருஷ்ணன், ஏ. விஜயகுமார் மற்றும் திமுக தரப்பில் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ்.இளங்கேோவன் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் அவசியமாகிறது. தற்போது தமிழகத்தில் அதிமுகவுக்கு 66 இடங்கள் மட்டுமே உள்ளது.கூட்டணி கட்சியான பாமகவுக்கு 5 இடங்களும், பாஜகவுக்கு 4 இடங்களும் கிடைத்துள்ளன. இதனால் மொத்தம் 75 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால், அதிமுகவுக்கு 2 ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவி கிடைப்பது உறுதியாகி உள்ளது.மற்றொரு பதவி திமுக கூட்டணிக்கு செல்லும் வாய்ப்பு ள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via