அமெரிக்க உளவுத்துறை அறிக்கை வெளியிட்டது.

by Admin / 27-03-2025 02:51:18pm
அமெரிக்க உளவுத்துறை அறிக்கை வெளியிட்டது.

அமெரிக்க உளவுத்துறை செவ்வாய் அன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதன்படி தைபானை கைப்பற்றுவதற்காக சீனா முயன்று வருவதாகவும் அமெரிக்காவிற்கு சீனா முதன்மையான ராணுவ மற்றும் சைபர் அச்சுறுத்தலை செய்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீனா ,அமெரிக்காவைப் போன்று அணு ஆயுதங்களால் சைபர் தாக்குதலை நிகழ்த்தக்கூடிய வலிமை கொண்டது. கிட்டத்தட்ட அமெரிக்காவிற்கு ஈடான வலிமை கொண்டது. அது உள்கட்டமைப்பாக இருந்தாலும் சரி, விண்வெளி மற்றும் அதன் திறன்களை குறி வைக்க கூடிய அளவிற்கு ஆற்றல் கொண்டது .இருப்பின் 2030ல் அமெரிக்கா சிறந்த செயற்கை நுண்ணறிவு திறன் பெற்ற சக்தியாக மாறும் நிலையில் சீனாவின் இந்த அச்சுறுத்தல் எதிர் நோக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா உள்ளதாக சொல்லப்படுகிறது. ரஷ்யா, ஈரா,ன் வடகொரியா, சீனா இணைந்து அமெரிக்காவிற்கு எதிரான சூழல்களை உருவாக்குவதாகவும் மாஸ்கோப் ரிய அளவில் மேற்கத்திய ஆயுதங்கள் மற்றும் உளவுத்துறைக்கு எதிரான அந்த போர் தந்த பாடங்கள் தக்க பாடத்தை புகட்டி உள்ளது என்றும் அறிக்கை வாயிலாக அறிய முடிகிறது.. சீன மக்கள் விடுதலை ராணுவம் தவறான செய்திகளை உருவாக்கி அதன் வழியான ஆளுமைகளை பின்பற்றவும் வலைதள அமைப்பு தாக்குதல்களை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் சீனா ஹைப்பர் சோனிக் ஆயுதங்கள் ஸ்தலத்திற்கு விமானங்கள் நீர்மூழ்கிக் கப்பல்கள் விண்வெளி மற்றும் சைபர் வலியான அணு ஆயுதங்களின் ஆயுதக் கிடங்கு உள்ளிட்ட மேம்பட்ட திறன்களை கொண்டு தாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளதாகவும் 2030 ஆம் ஆண்டு உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க சக்தியாக செயற்கை நுண்ணறிவை அமெரிக்கா வடிவமைத்து வந்தாலும் சீனாவும் இதனை கைக்கொள்ளும் என்றும் அமெரிக்காவில் நெருக்கடியை தூண்டும் நிலங்களில் சீனா இடைவிடாத முயற்சிகளை மேற்கொள்ளதாகவும் கூறியுள்ளது.சீனாவினுடைய வணிகங்களை ஒடுக்குவதில் அமெரிக்கா இதன் மூலம் நெருக்கடிகளை சந்தித்து வருவதால் அதன் மீது எந்தவிதமான செயலிலும் இறங்காமல் உள்ளது. சீன ஏற்றுமதியை அமெரிக்கா 20% வரி விதித்தது மூலம் கட்டுப்படுத்தியது.

அமெரிக்காவில் போதைப் பொருள்களின் காரணமாக அதிக மரணங்கள் நிகழக்கூடியதற்கு சீனா காரணமாக இருக்கிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிற நிலையில், சீனா அதை மறுத்து உள்ளது .இது ட்ரம் நிர்வாகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.. அமெரிக்காவில் ஆவணமற்ற குடியேறிகள் மூலம் உள் கட்டமைப்பு அதிகமாக பாதிக்கப்படுவதாக குடியரசு கட்சி தெரிவித்துள்ளது. சீனாவைப் பற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில் அதிக பக்கங்களை சீனாவிற்காகவே ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சீனா தைவானை தனது உரிமையான நாடாக கொள்வதற்காக பல்வேறு வழிகளை செய்து வருகிற நிலையில் உள்ளது.

 

Tags :

Share via