நகை கடை உரிமையாளரின் மகன்களை கடத்திய வழக்கில் ஐந்து பேர் கைது.

by Editor / 28-07-2024 10:20:54pm
நகை கடை உரிமையாளரின் மகன்களை கடத்திய வழக்கில் ஐந்து பேர் கைது.

திருவண்ணாமலை நகரம் அசலியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நரேந்திரகுமார் என்பவரின் இரண்டு மகன்களை பணத்திற்காக கடத்திச் சென்ற விவகாரத்தில் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆறு நபர்களை மாவட்ட காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

திருவண்ணாமலை நகரம் அசலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நரேந்திரகுமார். அதே பகுதியை சேர்ந்தவர் ஹன்ஸ்ராஜ். இவர்களுக்குள் தொழில் போட்டி மற்றும் முன்விரவாதம் காரணமாக நேற்று இரவு சுமார் 11 மணியளவில் நிரேந்தரகுமாரின் இரண்டு மகன்களான ஜித்தேஷ் மற்றும் அரிஹந்த் ஆகிய இருவரையும் ஹன்ஸ்ராஜ் பெங்களூரு பிரபல ரவுடிகளை வைத்து கடத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு திருவண்ணாமலை மாவட்ட போலீசார் விசாரணை செய்ததில் இன்று அதிகாலை மேல்செங்கம் சுங்கச்சாவடி அருகே சந்தேகப்படும்படியாக வந்த காரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் இரண்டு நபர்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து அடிப்படையில் முன்விரோதன் காரணமாக நரேந்திரகுமாரின் மகன்களை கடத்தியதை ஒப்புக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஹன்ஸராஜ், பில்லா, பிரவீன், சீனு, முயல் என்கின்ற ராஜ்குமார் ஆகிய ஐந்து பேரை திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் ஒன்பது லட்சம் ரூபாயை பரிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது மட்டுமின்றி இந்த கடத்தலுக்கு தொடர்புடைய மேலும் 6 நபர்களை கைது செய்ய இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

 

Tags : நகை கடை உரிமையாளரின் மகன்களை கடத்திய வழக்கில் ஐந்து பேர் கைது.

Share via