பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

by Admin / 07-06-2024 01:17:18pm
பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 இன்று டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி களின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமர் ஆகிறார். இக்கூட்டத்தில் பாஜக எம்பிக்கள் 217 பேரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.16 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு 12 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட நிதிஷ் குமார் சுயேச்சை எம்பிக்களும் கலந்து கொண்டனர். பாராளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு பிரதமர் நரேந்திர மோடி தன்னை குழு தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி கூறி உரையாற்றி வருகிறார்..

 

 

Tags :

Share via

More stories