நீட் ரத்து கோரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

by Staff / 03-07-2024 12:22:17pm
நீட் ரத்து கோரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி, திமுக இளைஞரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், சமூகநீதிக்கு எதிரான குளறுபடிகள் நிறைந்த இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
 

 

Tags :

Share via

More stories