கொரோனாவை போல் மாற்றொரு வைரஸ்.. உலக சுகாதாரமையம் எச்சரிக்கை

by Staff / 13-12-2022 02:46:16pm
 கொரோனாவை போல் மாற்றொரு வைரஸ்..  உலக சுகாதாரமையம் எச்சரிக்கை

'மெர்ஸ்' எனப்படும் மற்றொரு வைரஸ் கொரோனாவை போல் வேகமாக பரவி வருவதாக   உலக சுகாதாரமையம் எச்சரித்துள்ளது. சவுதி அரேபியாவில் உருவான இந்த வைரஸ் ஒட்டகத்தில் இருந்து மனிதர்களுக்கு பரவி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் பல நாடுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. கத்தாரில் கால்பந்து பார்க்கச் சென்றவர்கள் ஒட்டகத்தை விட்டு விலகி இருக்குமாறு ஆஸ்திரேலியா அறிவுறுத்தியது. பிரிட்டனிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்களின் சிறப்புக் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் சமீபத்தில் அதிகரித்துள்ளதாக உலக சுகாதாரமையம்  தெரிவித்துள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via

More stories