சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்துங்கள்- ராமதாஸ் கோரிக்கை
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பது அனைத்து நிலைகளிலும் உறுதியான நிலையில், அதற்கான பொறுப்பை தமிழக அரசு தட்டிக்கழிப்பது வருந்தத்தக்கது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான சிக்கலில் தமிழக அரசின் தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் பார்க்கும் போது, சமூக நீதிக்கு எதிரான சக்திகளால் முதலமைச்சர் தவறாக வழி நடத்தப்படுகிறாரோ? என்று ஐயப்படத் தோன்றுகிறது என கூறியுள்ளார்.
Tags :