சபரிமலை மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி சன்னிதானம் பூஜை வழிபாடுகளில் இருந்து 10 நாட்கள் விலகல்.

by Editor / 21-12-2022 10:27:10pm
சபரிமலை மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி  சன்னிதானம் பூஜை வழிபாடுகளில் இருந்து 10 நாட்கள் விலகல்.

சபரிமலை மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரியின் மாமா இறந்ததையடுத்து, சபரிமலை  சம்பிரதாயப்படி, சன்னிதானம் பூஜை வழிபாடுகளில் இருந்து 10 நாட்கள் விலகியுள்ளார்.  மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரியின் தாயாரின் சகோதரரும், திருச்சூர் பேரிங்கொடுகரை கிழக்கு செருமுகமனைகளும் சி.கே.ஜி.நம்பூதிரி மரணமடைந்தார்.  சபரிமலை மேல்சாந்தி கே ஜெயராமன் நம்பூதிரி 10 நாட்களுக்கு சன்னிதானத்தில் உள்ள சபரி விருந்தினர் மாளிகைக்கு மாற்றப்பட்டார்.  அதற்கு பதிலாக தந்திரி கண்டரரு ராஜீவரு பூஜை முறைகளை ஏற்று நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 10 நாட்கள் நிறைவடைந்த பின் மேல் சாந்தி மீண்டும் சபரிமலை சன்னிதானத்தில் தன்னுடைய சேவையினை தொடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo