பிரிட்டன் பிரதமராகும் கெய்ர் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ள கெய்ர் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "இங்கிலாந்து பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற கெய்ர் ஸ்டார்மருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் இந்தியா-இங்கிலாந்து விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த தங்களின் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன்" என்று கூறியுள்ளார்.
Tags :