3 வது மனைவியோடு வாழ்ந்தவன் 2 வது மனைவிக்கு தீ வைத்த கொடூரம்.

by Editor / 21-12-2022 09:43:24pm
3 வது மனைவியோடு வாழ்ந்தவன் 2 வது மனைவிக்கு தீ வைத்த கொடூரம்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேரு காலனி பகுதி சேர்ந்த கருப்புசாமி என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி. பெயிண்டிங் வேலை செய்து வரும் கிருஷ்ணமூர்த்திக்கு ஆறாண்டுகளுக்கு முன்பு கௌரி என்ற பெண்ணுடன் இரண்டாவது திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டாவது மனைவியிடம் விவாகரத்து பெற்று கிருஷ்ணமூர்த்தி மூன்றாவது மனைவியுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டாவது மனைவியான கௌரிவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி பிரச்சினை செய்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கௌரி மீது டர்பேண்ட் எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதில் தீக்காய்களுடன் இருந்த கௌரியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது சம்பவம் குறித்து கிழக்கு காவல்துறையில் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo