பாஜக நிர்வாகி முகம் சிதைக்கப்பட்டு வெட்டிக்கொலை
தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (33) பாஜகவில் எஸ்சி அணி மண்டல தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மர்ம நபர்கள் இரவில் கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த வெங்கடேசன் உடலை கைப்பற்றி போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Tags :



















