ஆற்றில் மூழ்கி மேலாளர் பலி

by Staff / 19-09-2023 02:48:35pm
ஆற்றில் மூழ்கி மேலாளர் பலி

திண்டுக்கல் மாவட்டம் சிவகிரிபட்டியை சேர்ந்தவர் அசோக்(வயது 46). தனியார் நிறுவன மேலாளர். இவர் குடும்பத்துடன் ஆனைமலையில் உள்ள உறவினர் வீட்டு திருமண விழாவில் பங்கேற்க வந்தார்.
இந்த நிலையில் நேற்று அசோக் தனது நண்பர்களான ஆயினங்குடி மற்றும் சகாப்தீன் ஆகியோருடன் ஆனைமலையில் உள்ள ஆழியாற்றில் குளிக்க சென்றார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற அசோக் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி அசோக்குமாரை தேடினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அசோக் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories