பட நடிகர் பாபு காலமானார்

by Staff / 19-09-2023 02:41:50pm
பட நடிகர் பாபு காலமானார்

பாரதிராஜா இயக்கத்தில் 1990ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'என் உயிர் தோழன்'. இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் பாபு. அதன்பின், ‘பெரும்புள்ளி’ , ‘தாயம்மா’ ஆகிய படங்களிலும் நாயகனாக நடித்தார். தொடர்ந்து, ‘மனசார வாழ்த்துங்களேன்’ படத்திற்காக ஒரு காட்சியில் டூப் போடாமல் மேலே இருந்து கீழே குதித்தபோது முதுகெலும்பு உடைந்து படுகாயம் அடைந்தார். கடந்த 30 ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவே இருந்தவர் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். நடிகர் பாபு, முன்னாள் அதிமுக அமைச்சர் க.இராஜாராமின் சகோதரி மகன் ஆகும்.

 

Tags :

Share via