வாரத்தில் 5 நாட்கள் வேலை நாள்

by Staff / 02-03-2023 11:44:38am
வாரத்தில் 5 நாட்கள் வேலை நாள்

வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் இரண்டு நாட்கள் வார விடுமுறை கொள்கை விரைவில் வரவுள்ளது. அதாவது வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படவுள்ளன. வாரத்தில் ஐந்து வேலை நாட்கள் என வங்கி சங்கங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) இதை தீவிரமாக பரிசீலித்து வருவதாக சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. இதை அமல்படுத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. முதல் மற்றும் 3வது வார சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via