12 மணி நேரத்தில் 17 நோயாளிகள் உயிரிழப்பு
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்வாவில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் ஒரே இரவில் 17 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் சனிக்கிழமை இரவு 10.30 முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 வரை நிகழ்ந்தன. இறந்தவர்களில் 12 பேர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் 5 பேர் மற்ற வார்டுகளில் சிகிச்சை பெற்று வந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மருத்துவமனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. போதிய டாக்டர்கள் இல்லாததால் இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags :



















