மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி உயிரிழப்பு

by Editor / 30-11-2022 08:29:44am
மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி உயிரிழப்பு

புதுச்சேரியின் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் கோவில் யானை லட்சுமி (32) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, யானை மயங்கி கீழே சரிந்தது. தொடர்ந்து, யானை அசைவின்றி கிடந்ததால் பாகன் மற்றும் கூடியிருந்த மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
 

மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி உயிரிழப்பு
 

Tags :

Share via