சபரிமலை சன்னிதானத்தில் விடுதி அலுவலகத்தில் கணினிகள் கோளாறு பக்தர்கள் அவதி
சபரிமலை சன்னிதானத்தில் உள்ள விடுதி அலுவலகத்தில் கணினிகள் கோளாறு காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டு அவதிக்குள்ளாகியுள்ளனர். சன்னிதானத்தில் உள்ள விடுதி அலுவலகத்தில் கணினிகள் கோளாறு ஏற்பட்டதால், பக்தர்கள் கூட்டம் அதிகமாகி, குழப்பம் ஏற்பட்டது. மண்டல பூஜைக்காக கோவில் திறக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்தும் கடந்த மாத பூஜையின் போது கூட ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரை சிரமைக்க முடியவில்லை.கணினிகள் பழுது காரணமாக விடுதி அலுவலகம் முன் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பல மணிநேரம் கடந்தும் பிரச்னைக்கு தீர்வு காணாததால், பக்தர்களிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, பக்தர்களின் போராட்டத்தை தவிர்க்க தேவசம்போர்டு முயற்சிமேற்கொண்டுள்ளது.
Tags :



















