கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து காசோலை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

by Editor / 31-08-2023 11:09:06pm
கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து காசோலை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதுவரை இந்த படம் ரூ.525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து காசோலை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். 100 கோடி ரூபாய்க்கான காசோலை கொடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

 

Tags :

Share via