சரி இதுக்கு என்ன தீர்வு ?
கொரோனா பெயரை விட வேறு கொடுமை ஓன்று நடுத்தர மக்களிடம் இருக்கிறது. அதுதான் இ எம் ஐ .நோயால் இறந்து மீண்டவர்கள் கூட இந்த பெயரை கேட்டால் ஏன் உயிர் வாழ்கிறோம் என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு இருக்கிறது மத்திய அரசின் லட்சணம். கடந்த ஓராண்டாக கொரோனா அரக்கன் பிடி. சோற்றுக்கு வழி இல்லை, வேலை இழப்பு, தொழில் இல்லை . சந்தோசமாக இருக்கும் ஜீவன்கள் என்றால் அரசு வேலையில் இருப்போரும் பென்ஷன் வாங்குவோரு ம் தான் என்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதமே நடக்கிறது .
கொரோனாவின் முதல் அலையால் ஏற்பட்ட பொருளாதார சரிவு நாட்டிலும் வீட்டிலும் இன்னும் சரியாகாத நிலையில், அடுத்து இரண்டாம் அலையின் ஊரடங்கும் வந்துவிட்டது. அதிக சம்பளம் வாங்கியவர்களுக்கு சம்பளத்தில் குறைப்பு, பலருக்கு வேலை இழப்பு, தொழிலாளர்களுக்கு வேலையில்லாமை என்று காட்டம் காட்டி வருகிறது கொரோனா இரண்டாம் அலை.
இந்த நிலையில்... தமிழகத்தில் செயல்பட்டுவரும் தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள், வங்கிகள் சார்ந்த வசூல் ராஜாக்களினால் கடும் வேதனையில் இருக்கிறார்கள். தவணையைத் திரும்பச் செலுத்த சொல்லியும், தவறினால் சொத்துக்களை ஏலம் விடுவோம் என்றும் கடுமையாக மிரட்டி வருகிறார்கள் வசூலிக்கும் தரப்பினர்.கொரோனா வைரஸ் தொற்றுகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசும் பலவிதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது இதனால் கடந்த 14 மாதங்களாக ஊரடங்கு நீட்டிப்பு செய்துவருகிறது.
அரசு ஊழியர்களைத் தவிரத் தனியார்த் துறையில் வேலைசெய்பவர்கள், தினக்கூலிக்குச் செல்பவர்கள் என பாதிப்பேர் வேலையை இழந்தும், மற்றவர்கள் பாதி ஊதியத்துக்கும், கால் ஊதியத்துக்கும் வேலை செய்துவருபவர்கள், மிகவும் சிரமத்தில் இருந்துவருகிறார்கள்.
வாடகை வீட்டில் இருப்பவர்கள் வாடகை கொடுக்கமுடியாமல் அன்றாடம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கை, கால் மற்றும் கழுத்தில் இருப்பதை மலிவு விலைக்கு விற்பனை செய்தும், அடகு வைத்தும் நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்துவருகிறார்கள்.இந்த நிலையில் வீட்டுக் கடன், கார், பைக் கடன், பர்சனல் கடன், தொழில் கடன் வாங்கியவர்களை வங்கி நிர்வாகம் மிரட்டிவருவதாக மக்கள் புலம்புகிறார்கள்.சரியாக தவணையைச் செலுத்தமுடியவில்லை. அதனால் கூட்டுவட்டி போட்டு வாராக் கடனாக அறிவித்து சொத்துகளை ஏலம் விடப்போகிறோம் என்று வங்கிகள் அறிவிக்கின்றன. மத்திய அரசோ அவகாசம் தந்தது. அப்புறம் பழைய நிலை தான்.
கொரோனா பீதியைவிட வங்கிகளின் வசூல் நெருக்கடிகள்தான் கொடுமையாக இருக்கிறது. இதை யாரும் எந்த ஆட்சியாளரும் கண்டுகொள்ளமாட்டார்கள். பல லட்சம் கோடி வங்கி மோசடி செய்தவர்களை ஊக்குவித்து மறுகடன் தருகிறார்கள். ஆனால் அப்பாவிகள் வீட்டுக்கடன், கல்விக் கடனை வாங்கியதை வட்டிக்கு வட்டி எனக் கூட்டுவட்டி போட்டு வசூலிக்க ஏல நடவடிக்கைக்கு முயற்சித்து வருகிறார்கள் என்று பலரும் புலமை வருகிறார்கள்
Tags :