அதிமுக தனித்து ஆட்சி: ஈபிஎஸ் உறுதி

by Editor / 14-07-2025 12:04:54pm
அதிமுக தனித்து ஆட்சி: ஈபிஎஸ் உறுதி

"2026-இல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும்" என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பல முக்கிய பாஜக புள்ளிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில், சேலத்தில் இதுகுறித்து இன்று (ஜூலை 14) விளக்கமளித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தேர்தல் நேரத்தில் பலம் பொருந்திய கூட்டணியாக அதிமுக கூட்டணி இருக்கும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via