இந்து மத விரதங்கள்

இந்து மத விரதங்கள்
இறைவழிபாட்டில் முக்கிய ஒன்றாக இருப்பது...தம் மனத்தை- உடலைக்கட்டுப்பாட்டில் வைத்து அதன்மூலம் இறைவனின் அருளைப்பெற முயலும் முயற்சியே விரதங்கள்
இந்து மதத்தில் விரதங்கள் பல வகை உண்டு.குறிப்பாக,குடும்பத்தைப்பேணிகாத்து,கணவன்,குழந்தைகள் நலமுடன் வாழ இறைவனிடம் நல்லருளைப்பெற,பெண்கள் மேற்கொள்ளும் விரதங்களே அதிகமாக இருக்கின்றன.ஆண்கள் விரதங்கள் மேற்கொண்டாலும் அவை பெண்களோடும் பெண்கள் இன்றி நிகழாதவாறு கட்டமைக்கப்பட்டுள்ளன.
சபரிமலைக்கு மாலை இட்டு விரதமிருந்து செல்லும் ஆண் மலைக்குச்சென்று சாமி தரிசனம் செய்து விரதத்தை முடிக்கிறான். ஆனால்,பெண் மாலையிடாமல்,சபரிமலை செல்லாமல் வீட்டினுள் கணவனின் சபரிமலை யாத்திரை
முடிந்து வரும் வரை விரதமிருப்பவளாக இருக்கிறாள்.ஆனால்,பெண் இருக்கும் விரதத்தில் எந்த ஆணிற்கும் பங்கல்லை.,
ஒரு சில பேர்களைத்தவிர.....மற்றவரு்கள் அது பெண்களுக்கானது என்று விலகியே இருக்கிறார்கள்.
இந்து மதமும் இதை ஒருபொருட்டாக எடுத்து கொள்வதில்லை.பெண்தான் இங்கு முதன்மையாகிறாள்.அவள்
விரத்தின் ேமூலம் பெறும் சக்தியே கணவன்-குழந்தைகளை,குடும்பத்தைக்காக்கிறது.தம்பதிகள் இருவரும் விரமிருக்க....இந்து மதம் என்ன சொல்கிறது.
வெள்ளிக்கிழமை விரதம்
சித்திரை மாத சுக்கில பட்சத்தில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்த ஆண்டு சித்திரை மாதம் சுக்கில பட்ச வெள்ளிக்கிழமை வரும்வரை விரதமிருந்தால்,செல்வச்செழிப்போடு கூடிய அனைத்து செளபாக்கியங்களும் வந்து சேரக்கூடியதாக இருக்கும்.
குபேரன்,பிரம்மா,அத்ரி முனிவர்,துர்வாச முனிவர்,சந்திரன்,போன்றோர் வெள்ளிக்கிழமை விரதமிருந்ததால்,அவர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைத்தன.
சஷ்டி விரதம்
நோய்நொடியிலிருந்து விடுபட்டு தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
சஷ்டி விரதமிருந்ததால்தான் வஜ்ரமாலி என்ற அரசன் கொடும் நோயிலிருந்து விடுபட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விரதம் மார்கழி மாதம் சுக்கிலபட்ச சஷ்டி திதி முதல் ஒவ்வொரு மாதமும் வரும் கிரூஷ்ண பட்ச சஷ்டியில்
மேற்கொள்ள வேண்டிய விரதமாகும்.
சங்கடகர சதுர்த்தி விரதம் மாசிமாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தி திதியிலிருந்து தொடங்கி மாதமாதம் எடுக்கும் விரதமாகும்.இவ்விரதம் மேற்கொள்வோர்க்கு சகலவிதமான துன்பங்களும் பாவங்களும் அகலும்என்பது நம்பிக்கை.
Tags :