நெல்லையில் திருமாவளவன் உண்ணாவிரதப் போராட்டம்

by Staff / 20-08-2023 04:50:40pm
நெல்லையில் திருமாவளவன் உண்ணாவிரதப் போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணி சார்பில், மதுரை தவிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “நீட் விலக்கு மசோதாவில் எந்த சூழலிலும் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார். அவருடைய பேச்சை விடுதலை சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. ஆளுநர் மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அதன்படி இப்போராட்டத்தில் நெல்லையில் நாளை நான் பங்கேற்கிறேன்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories