ஏர் இந்திய விமான விபத்து: எரிபொருள் சிக்கல் இல்லை

by Editor / 12-07-2025 12:31:10pm
ஏர் இந்திய விமான விபத்து: எரிபொருள் சிக்கல் இல்லை

கடந்த ஜூன் 12ல் நடந்த அகமதாபாத் ஏர் இந்திய விமான விபத்து குறித்து முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, விமான எரிபொருள் மாதிரிகளும் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சோதனை முடிவுகளின்படி, எரிபொருள் தரமானதாக இருந்துள்ளது. ஆகையால், விமான விபத்துக்கும் - எரிபொருள் தரத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது ஆய்வுகளின் வாயிலாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறே விமான விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.

 

Tags :

Share via