18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குழந்தைகள் காப்பக உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் பிரியா, கார் ஓட்டுநர் பழனி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஓட்டுநர் பழனி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வண்டலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் மூவரும் கைதாகியுள்ளனர்.
Tags :