காங்கிரஸ்தேர்தலில் டெபாசிட் கூட பெறாது: லல்லுபிரசாத் யாதவ்

by Editor / 25-10-2021 05:30:55pm
காங்கிரஸ்தேர்தலில் டெபாசிட்  கூட பெறாது: லல்லுபிரசாத் யாதவ்


பீகாரில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு முன்னதாக ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட்டை இழப்பார்கள் என்று கூறியுள்ளார். மாநிலத்தில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி குசேஷ்வர் அஸ்தான் மற்றும் தாராபூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி பகுதியாக 2020 பீகார் தேர்தலில் போட்டியிட்டது, மற்றும் சீட் பகிர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சி சார்பில் குசேஷ்வர் என்பவர் அஸ்தானில் என்னும் தொகுதியில் இருந்து போட்டியிட்டு மொத்தம் 7,200 வாக்குகளில் தோல்வியடைந்தார் என்பதை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.


எனவே அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சி மீண்டும் எதிர்பார்த்தது. ஆனால் அக்கட்சிக்கு ஒதுக்காமல் ராஷ்டிரீய ஜனதாதளம அங்கு போட்டியிடும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு கட்சிகளளுக்கு இடையிலான கூட்டணி முறிந்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பீகார் மாநில பொறுப்பாளர் ஆர்ஜேடி காங்கிரஸுக்கு ஒரு இடத்தைக் கொடுத்திருந்தால் இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி அப்படியே இருந்திருக்கும் என்று கடந்த சனிக்கிழமை கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பாஜகவின் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via