காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி பேரலில் அடைத்த அரக்கன்

by Staff / 07-06-2022 11:56:12am
 காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி பேரலில் அடைத்த  அரக்கன்

காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி பேரலில் அடைத்து வைத்துவிட்டு தப்பி சென்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.தெலுங்கக்கான மாநிலம் மகபுர்க் நகரை சேர்ந்தவர் அணில் குமார் கடந்த 2020ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் ஹில்ஸ் பகுதியில் குடித்தனம் நடத்தி வந்தார். திருமணமான சில மாதங்களிலேயே அணிலுக்கும் சரோஜாவும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வந்து உள்ளது. இதனால் சரோஜா கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று இதையடுத்து பெற்றோர் சமாதானப்படுத்திய சரோஜாவை ஒரு மாதத்திற்கு முன்பு கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். சரோஜாவின் பெற்றோர்  வழக்கம் போல் போன் செய்த போது சரோஜா போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அணிலுக்கு போன் செய்தால் எடுக்கவில்லை இதனால் சந்தேகம் அடைந்த சரோஜாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு பூட்டி இருந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது ஜிப்ரீல் போலீசார் வீட்டிற்கு வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தண்ணீர்டிரம்மில் சரோஜா உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அடைக்கப்பட்டிருந்தது அழுகிய நிலையில் துண்டு துண்டாக காணப்பட்ட சடலத்தை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீஸ் விசாரணையில் அணியில் குமாருக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து சரோஜாவை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்ததால் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டதாக உடற்பயிற்சி செய்யும் தம்புல்ஸ் என்ற கருவியின் சரோஜாவை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். காதல் மனைவி உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்துவிட்டு  கொலையை மறைக்க உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் மறைத்து வைத்துவிட்டு அதனை எடுத்துச் சென்று புதரில் வீசா திட்டமிட்டுள்ளான். அதற்குள்ளாக மனைவியின் பெற்றோர் தங்கள் மகளை தொடர்பு கொள்ள இயலாததால் அணிலே தொடர்பு கொண்டுள்ளன இதை அடுத்து மாட்டிக் கொள்ளக்கூடாது என்று வீட்டை பூட்டிவிட்டு அணில் தலைமறைவானது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிரமாக அணிலை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via