1330 குறள்களையும் ஒப்புவித்த சாதனை சிறுவர்களுக்கு அசத்தல் பரிசு!
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக்கோரி 1330 குறள்களையும் ஒப்புவித்து சாதனை படைத்த 2 சிறுவர்களுக்கு வி.ஜி.பி.உலக தமிழ்ச் சங்கம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் கடலாடி தங்கலை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன்கள் ஆபர்காம் ஜோஸ் மற்றும் அருணிஷ்ஷேண்டோ. இரு சிறுவர்களுக்கும் திருக்குறள் மீதுள்ள பற்றால் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததுடன் மட்டுமில்லாமல், 1330 குறள்களையும் சிறு பிழையில்லாமல் மனப்பாடமாக ஒப்புவித்து மாபெரும் சாதனையை படைத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை வி.ஜி.பி.உலக தமிழ்ச் சங்கம் மற்றும் அசிஸ்ட் வேல்ர்டு ரெக்கார்டு என்கிற அமைப்பும் இணைந்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் சங்கத்தில் நடத்தியுள்ளனர். இதில், ஆபர்காம் ஜோஸ் 33 நிமிடம் 8 நொடியிலும்,அருணிஷ்ஷேண்டோ 25 நிமிடம் 47 நொடியிலும் குறள்களை ஒப்புவித்து சாதனை படைத்த இருவருக்கும் குரல் வித்தகர் விருதினையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி கெளரவித்தனர். மேலும்,இவர்களுக்கு வி.ஜி.பி.உலக தமிழ்ச் சங்கம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கினர்.
Tags :