குடும்பத் தலைவிகளுக்கு  மாதம் ரூ.1,000   எப்போது  ?

by Editor / 29-06-2021 04:43:42pm
 குடும்பத் தலைவிகளுக்கு  மாதம் ரூ.1,000   எப்போது  ?

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. இது குறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு விரைவில் அரசாணை வெளியாகும். அந்த அறிவிப்பை முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிடுவார். எந்த குறையும் இல்லாமல் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். 
இதைதொடர்ந்து தமிழகத்தில் மின்தடை குறித்து பேசியவர், கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 4 ஆயிரம் மெகாவாட் அனல் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தத் திட்டம் 2010ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை. விவசாயிகளுக்கும் வீடுகளுக்கும் தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும் என்று கூறினார்.

 

Tags :

Share via