கேரள அரசை கண்டித்து தேனியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

by Staff / 27-05-2024 05:06:27pm
கேரள அரசை கண்டித்து  தேனியில்  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்ட முயற்சி செய்யும் கேரள அரசை கண்டித்து தமிழக விவசாயிகளின் பாதுகாப்பு சங்கம் சார்பில் தேனியில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது, “நாங்க மட்டும் பால், முட்டை, காய்கறி எல்லாம் தர வேண்டும், ஆனால், நீங்க தண்ணீர் தர மாட்டீங்களா?” என விவசாயிகள் ஆவேசமாக விமர்சித்துப் பேசினர். மேலும், “முல்லை பெரியாறு அணையை உடைத்தால் விட்டுவிடுவோமா?. நாங்கள் அந்த அணையை உயிராக நேசிக்கிறோம். ஆகையால், கேரள அரசு இத்தகைய போக்கை கைவிட வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.

 

Tags :

Share via