மதுரை ஆவினில் 120 லிட்டர் பால் பாக்கெட் திருட்டு கண்டுபிடிப்பு.

by Editor / 14-11-2022 08:14:18am
மதுரை ஆவினில் 120 லிட்டர் பால் பாக்கெட் திருட்டு  கண்டுபிடிப்பு.

மதுரை ஆவினில் நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு அது மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலமாக டிப்போக்களில் விநியோகம் செய்யப்படுகிறது.

கூடுதலாக பால் பாக்கெட் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஆவின் பாலகத்தில் இருந்து வெளியே வரும் பால் வாகனங்களை சோதனை செய்த பொழுது அதில் 60 லிட்டர் வீதம் இரண்டு வாகனங்களில் 120 லிட்டர் பால் பாக்கெட் திருடி எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பால் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via

More stories

Logo