மூன்று பேர் காலில் தான் விழவேண்டுமே தவிர ,மற்ற யாருடைய காலிலும் விழக்கூடாது-.ரஜினிகாந்த்

by Admin / 20-08-2023 04:00:35pm
 மூன்று பேர் காலில் தான் விழவேண்டுமே தவிர ,மற்ற யாருடைய காலிலும் விழக்கூடாது-.ரஜினிகாந்த்

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகிநாத் ஆதித்திய நாத்  காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி கடும் விமர்சத்திற்கு உள்ளாகியுள்ளது .ரஜினிகாந்த் ஒரு நிகழ்வு ஒன்றில், யார் காலில் விழ வேண்டும் என்பதற்கு விளக்கம் கொடுத்திருந்தார். மூன்று பேர் காலில் விழ வேண்டுமென்றும் கடவுள், தாய், தந்தையர் இந்த மூன்று பேர் காலில் தான் விழ வேண்டுமே தவிர ,மற்ற யாருடைய காலிலும் விழக்கூடாது என்கிற கருத்தை தனது ரசிகர்களிடம் தெரிவித்திருந்த நிலையில் ,அவர் தன்னைவிட வயதில் குறைந்தவரான உ.பி. முதல்வரின்  காலில் விழுந்தது பெரும் விமர்சனத்தை கொண்டு வந்துள்ளது. யோகி ஒரு துறவி என்பதால் அவர் காலில் விழுவதில் தவறில்லை என்றும் இரு வேறுபட்ட விமர்சனங்கள்  கலக்கி கொண்டிருக்கின்றன.

 

Tags :

Share via

More stories

Logo