ராமேசுவரம் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடிமேல்.

by Admin / 25-11-2021 10:18:08pm
 ராமேசுவரம் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடிமேல்.

 ராமேசுவரம் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடிமேல்.
ராமேசுவரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1 கோடியே 21 லட்சத்து 99,250-ம் மற்றும் தங்கம் 94 கிராமும், வெள்ளி 1 கிலோ 900 கிராமும் கிடைத்தது.

கடந்த 2 மாதத்தில் ராமேசுவரம் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடியை தாண்டியது


ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில்   உண்டியல்  நேற்று திறந்து எண்ணப்பட்டது. அம்மன் சன்னதி திருக்கல்யாண மண்டபத்தில்  நேற்று இந்த உண்டியல் எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் பழனிக்குமார் தலைமையில்  உதவி ஆணையர் சிவலிங்கம்  ஆய்வாளர் தங்கையா  மேலாளர் சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையில் இந்த உண்டியல் பணம் எண்ணப்பட்டது.


 ரூ. 1 கோடியே 21 லட்சத்து 99,250-ம் மற்றும் தங்கம் 94 கிராமும், வெள்ளி 1 கிலோ 900 கிராமும் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் கமலநாதன், ராமநாதன், அண்ணாதுரை,  முருகானந்தம், பிரபாகரன், தக்கார் பிரதிநிதி வீரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இது 2 மாத உண்டியல் தொகை.

 

 

Tags :

Share via

More stories

Logo